பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் காங்கிரஸ்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி தாக்கு

By செய்திப்பிரிவு

தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது காங்கிரஸ் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், கும்ளாவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஏராளமான பொய் வாக்குறுதிகளை அளித் துள்ளது. 2004, 2009-ம் ஆண்டு களில் வெளியிட்ட தேர்தல் வாக் குறுதிகளை, இப்போதைய அறிக் கையிலும் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் அறிக்கை என்பது கீதை, குரான், பைபிளைப் போன்று புனித நூலாக இருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, அரசியல் ஆயுதமாக இருக்கிறது. அதற்கு எந்த புனிதமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், மக்களின் கண்களில் மண்ணைத் தூவும்படியாக உள்ளது.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகளை பொதுமக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். அவை அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள்.

இதே போன்றுதான் 2004-ம் ஆண்டும், 2009-ம் ஆண்டும் வெளி யிட்ட தேர்தல் அறிக்கைகளில் பல்வேறு வாக்குறுதிகளை அளித் தனர். விலைவாசியை குறைப் போம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை அளிப்போம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்தனர். அதை நிறைவேற்றி னார்களா?

தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றாதது குறித்து மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினால்தான், பொய்யான வாக்குறுதிகள் அளிப்பதை அரசியல் கட்சிகள் கைவிடும்.

ஆட்சியை கைப்பற்றும் கட்சி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளி யேறும்போது என்னென்ன தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறை வேற்றியது என்பது பற்றி தேர் தல் ஆணையம் கேள்வி கேட்கக் கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

பழங்குடியினர் நலனில் பாஜக

இந்த நாட்டில் பழங்குடியினரும் வாழ்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கட்சியினர் மறந்துவிட்டனர். கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, பழங்குடியினரின் நலனுக்கான அமைச்சகத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை.

வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில்தான், பழங்குடியினர் நல அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. அவர்களின் மேம்பாட்டுக்காக பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கப்பட்டது.

ஜார்க்கண்ட் தனி மாநிலக் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, அதை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஏளனம் செய்து அலட்சியப்படுத்தினார். வாஜ்பாய் ஆட்சியில்தான் ஜார்க்கண்ட் தனி மாநிலம் உருவாக்கப்பட்டது.

ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் பல்வேறு தந்திரங்களை கையாள்கிறது. நேரத்திற்கு தகுந்தாற் போல் சிலரின் ஆதரவை அக்கட்சி பெற்றுக்கொள்கிறது.

இரும்புத்தாது, நிலக்கரி சுரங்கத்தில் காங்கிரஸ் தலைவர் கள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மின் உற்பத்தித் திட் டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஊழல் நடைபெற்றுள்ளது. விற் பனை வரி, வருமான வரி என்பதைத்தான் கேள்விப்பட்டிருக் கிறோம். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஜெயந்தி நடராஜன் இருந்தபோது, ‘ஜெயந்தி வரி’ இருந்துள்ளது. அந்த வரியை செலுத்தினால்தான் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் கோப்புகள் நகர்ந்தன.

ஊழலை ஒழிக்க முடியும். அதற்கு ஆட்சியில் உள்ள தலைவருக்கு துணிச்சலும் நேர்மையுணர்வும் தெளிவான கொள்கையும் இருக்க வேண்டும்.

ஆயுதங்களை கைவிடுங்கள்

மாவோயிஸ்டுகள் ஆயுதங் களை கைவிட வேண்டும். அந்த இயக்கத்தில் இருக்கும் இளை ஞர்களின் கையில் துப்பாக்கிக்கு பதிலாக பேனாவும், உழுவதற் கான கலப்பையும் இருக்க வேண் டும் என்பதே எனது கனவு. அகிம் சையை மகாத்மா காந்தி வலி யுறுத்தியுள்ளார். மாவோயிஸ் டுகள், ஆயுதங்களை கைவிட்டு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டு கள் பந்த் நடத்திய சூழ்நிலை யில், மிரட்டல்களுக்கு அஞ்சாமல் பெருமளவில் எனது கூட்டத்தில் பங்கேற்க வந்திருக்கும் உங் களுக்கு (மக்களுக்கு) எனது நன்றி. ஜனநாயகத்தின் மீது உங்களுக்கு உள்ள நம்பிக்கை யையும், துப்பாக்கியைப் பார்த்து அஞ்சாத தன்மையையும் காட்டு வதாக இது அமைந்துள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்