குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த கலவரத்தை பாஜகவினரே திட்டமிட்டு அரங்கேற்றியதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட, உ.பி.யின் மீரட்டில் விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று மகா பஞ்சாயத்துக் கூட்டம் நடைபெற்றது. இதில் அர்விந்த் கேஜ்ரிவால் பேசியதாவது:
விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே அழிக்கக் கூடிய வகையிலான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தால், உங்களின் (விவசாயிகள்) நிலங்கள் பெரு நிறுவனங்களால் பறிக்கப்பட்டு விடும். உங்களுக்கு சொந்தமான நிலத்தில் நீங்களே கூலித் தொழிலாளராக மாற்றப்பட்டு விடுவீர்கள். இதன் காரணமாகவே, இந்த சட்டங்களை எதிர்த்து நாம் போராடி வருகிறோம்.
சுதந்திரத் தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை திட்டம் தீட்டி அரங்கேற்றியவர்கள் பாஜகவினர்தான். செங்கோட்டையில் சீக்கியக் கொடியை ஏற்றியவர்களும் அவர்கள்தான். ஆனால், தேசத்துக்கு எதிராக செயல்பட்டதாக விவசாயிகள் மீது தற்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago