ராமர் கோயில் கட்டுவதற்கு குவிந்தது ரூ.2,100 கோடி நிதி

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் பணியில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டது.

ராமர் கோயில் கட்டும் திருப் பணிக்கு நன்கொடை திரட்டும் பணி கடந்த ஜனவரி 15-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 27-ம் தேதி வரை நன்கொடை திரட்ட அறக்கட்டளை முடிவு செய்திருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் வரை ரூ.2,100 கோடி அளவுக்கு நிதி வசூலாகியுள்ளது.

இதுகுறித்து கோவிந்த் தேவ் கிரி கூறும்போது, “ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.1,100 கோடி அளவுக்கு நிதி திரட்ட முடிவு செய்திருந்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட மக்கள் அதிக அளவு நிதி கொடுத்துள்ளனர். கடந்த 44 நாட்களில் ரூ.2,100 கோடிக்கு நிதி திரண்டுள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக ரூ.1,000 கோடி சேர்ந்துள்ளது.

மத வேறுபாடுகளைக் கடந்து மக்கள் நிதியுதவி வழங்கியுள்ளனர். கோயில் ரூ.400 கோடி செலவிலும், கோயில் வளாகம் ரூ.700 கோடி செலவிலும் அமைக்கப்படும். கோயில் வளாகத்தை கட்டி முடிக்க மொத்தம் ரூ.1,100 கோடி செலவாகும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்