தடுப்பூசி போட்டுக்கொள்ள மூத்த குடிமக்கள் பெயரை பதியலாம்: மத்திய அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மூத்த குடிமகக்கள் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணைய வழிக் கூட்டத்தில் பல் வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரச் செய லர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியைத் தொடங்குவது குறித்து மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:

மார்ச் 1-ம் தேதி முதல் மூத்த குடிமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதற்காக அவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பும் பயனாளிகள் தாங் களாகவே கோ-வின் 2.0 இணையதளத்திலும், ஆரோக்கிய சேது செயலியிலும் முன்பதிவு செய்யலாம்.

அதில், தடுப்பூசி போடப் படும் அரசு, தனியார் மருத்துவ மனைகளின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். பயனாளிகள் எங்கு, எப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புகிறார்கள் என் பதையும் அப்போது தேர்வுசெய்து கொள்ளலாம்.

அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவ மனைகளில் கட்டணத்திலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

கரோனா தடுப்பூசி போடும் மையங்களில் போதிய இடவசதி உள்ளதையும், மருந்துகளுக்கான குளிர்சாதனப் பெட்டிகள் இருப்பதையும், போதிய ஊழியர் கள் இருப்பதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

பயனாளிகள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, 45 முதல் 59 வயதைக் குறிப்பிடும் மருத்துவரின் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அடையாள அட்டை, தொழிலாளர் சான்றிதழ் என இதில் ஏதாவது ஒன்றைக் கொண்டு சென்றும் மாநில அரசு மையங்களில் நேரில் பதிவு செய்து தடுப்பூசியை போட்டுக் கொள்ள முடியும்.

இந்த நடைமுறைகளை மாநில அரசு எளிமையாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். மேலும், ஆஷா, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பஞ்சாயத்து நிர்வாக பிரதிநிதிகள் ஆகியோரின் உதவியுடனும் கிராமங்களில் உள்ள முதியோரை அழைத்து வந்து குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி செலுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு மத்திய சுகாதா ரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்