தனியார் மருத்துவமனைகளில் ரூ.250-க்கு கரோனா தடுப்பூசி

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிகளின் விலையை ரூ.250-ஆக நிர்ணயித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப் படுத்துவதற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தயாரிப் பான கோவிஷீல்டு தடுப்பூசியும், உள்நாட்டு தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

முதல்கட்டமாக, சுகாதார ஊழியர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் செலுத் தப்பட்டு வந்த இந்த தடுப்பூசிகள், அடுத்த மாதம் முதலாக பொதுமக்களுக்கு செலுத்தப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதன்படி, நாடு முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மையங்களில் இந்த தடுப்பூசிகளை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படவுள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளில் இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைக் கருத்தில்கொண்டு, தனியார் மருத்துவமனைகள் அல்லது மையங்களில் கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்கு ரூ.250-ஐ கட்டணமாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்