2 நாட்கள் கரோனோ தடுப்பூசி நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கோ-வின் டிஜிட்டல் தளம் மேம்பாடு பணி காரணமாக பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் கோவிட் 19 தடுப்பூசிகள் போடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கோவிட் தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி, மார்ச் 1ம் தேதியிருந்து, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட, இதர உடல்நல பிரச்சனை உள்ளவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

இதற்காக கோவிட் 19 தடுப்பூசி போடப்படுவதை கண்காணிக்கும், கோ-வின் டிஜிட்டல் தளம் மேம்படுத்தப்படுகிறது.

கோவின் 1.0-விலிருந்து கோ-வின் 2.0-வுக்கு மாறுவதால், வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் (பிப்ரவரி 27 மற்றும் 28) தேதிகளில் கோவிட்-19 தடுப்பூசி போடும் நிகழ்வுகள் நடக்காது. இந்த மாற்றம் குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்