மீனவ நலத்துறைக்கு தொடர்பாக புதுச்சேரியில் பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் வெளிப்படையாகவே மோசமாக காயப்படுத்துகிறீர்கள் எனக் கூறியுள்ளார்.
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (பிப். 25) புதுச்சேரிக்கு வருகை தந்தார். ஜிப்மரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த பின்னர், லாஸ்பேட்டை விமான நிலைய சாலையில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில் ‘‘சில சமயம் காங்கிரஸார் மாநிலங்களுக்கு இடையில் பிரச்சினைகளை எழுப்புவார்கள். மக்களைப் பிரித்து எதிரிகளாக்கி அரசியல் செய்வார்கள். பொய் சொல்வதில் அனைத்துப் பதக்கமும் பெறத் தகுதியானவர்கள் காங்கிரஸ் தலைவர்கள். மீனவ நலத்துறைக்கு அமைச்சகம் அமைப்போம் என்கின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி 2019-ல் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டுகளை விட 80 சதவீதம் அதிக நிதியை ஒதுக்கியுள்ளோம். வாஜ்பாய் அரசு மலைவாழ் மக்களுக்குத் தனி அமைச்சகம் ஏற்படுத்தித் தந்தது. பொய் கூறுவதால்தான் காங்கிரஸை மக்கள் ஏற்க மறுக்கின்றனர்.’’ எனக் கூறினார்.
இதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அவர் தனது பதிலில் கூறியுள்ளதாவது:
‘‘டியர் பிரதமர்
மீனவர்கள் வேண்டுவது மீனவர்களுக்கென தனியாக ஒரு அமைச்சகம். ஆனால் தற்போது இருப்பது வேறு அமைச்சகத்தின் ஒரு துறையாக மட்டும் உள்ளது. வெளிப்படையாகவே மோசமாக காயப்படுத்துகிறீர்கள்.’’ எனக் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago