மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கரோனா பரவல்;  லாத்தூரில் 2 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும்நிலையில் அங்குள்ள லாத்தூர் மாவட்டத்தில் 2 இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.

இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

சிகிச்சை பெறுபவர்களில் 74 சதவீதத்துக்கும் அதிகமானோர், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அங்கு பிப்ரவரி 9-ம் தேதி வரை தினசரி பாதிப்பு என்பது சராசரியாக 2489 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால் பிப்ரவரி 10-ம் தேதிக்கு பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. தற்போது 6 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

கரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமராவதி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புனே மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாக்பூர் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி கடந்த 10 நாட்களில் பரவி வரும் கரோனா வைரஸின் தன்மை குறித்து ஆய்வு நடத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வைரஸ்களின் மாதிரிகள் புனே வைரஸ் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் 2 இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களான வரும் 27 மற்றும் 28 தேதிகளில் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

ஜனதா ஊடரங்காக அமல்படுத்தப்பட்டாலும் அவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும். மக்கள் முன் வந்து ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்