கரோனா பாதிப்பு ஜனவரி 29-ம் தேதிக்கு பிறகு கடும் உயர்வு; புதிதாக 16,738 பேருக்கு தொற்று; பலியும் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பு நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் ஜனவரி 29-ம் தேதிக்கு பிறகு அதிக அளவில் தினசர கரோனா தொற்று 16,738 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. அதுபோலவே கரோனா பலியும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,738 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,10,46,914 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,07,38,501 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 11,799 குணமடைந்துள்னர்.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், அதேசமயம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதால் கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,51,708 ஆக உள்ளது.

கரோனா வைரஸால் நேற்று மட்டும் 138 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,56,705 ஆக அதிகரித்துள்ளது.

நாடுமுழுவதும் மொத்தம் 1,26,71,163 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்