தேர்தலில் பாஜகவால் ஒரு கோல் கூட போட முடியாது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பதில்

By செய்திப்பிரிவு

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஹூக்ளியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன். இத்தேர்தலில் பாஜகவால் ஒரு கோல் கூட போட முடியாது. வங்கத்தை மோடி ஆளப்போவதில்லை. குண்டர்கள் வங்கத்தை ஆளப் போவதில்லை.

நாட்டின் மிகப்பெரிய வன்முறையாளர் மோடி. திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் மனைவியிடம்சிபிஐ விசாரணை நடத்தி இருப்பது பெண்களுக்கான அவமானம்.

இவ்வாறு மம்தா பேசினார்.

கடந்த 7-ம் தேதி மிட்னாபூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “வங்கத்து மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் விரைவில் ராமர் அட்டையை காண்பிப்பார்கள்” என்றார்.

கால்பந்து விளையாட்டின்போது, விதிகளை மீறும் வீரரை வெளியேற்ற சிவப்பு அட்டையை காண்பிப்பது வழக்கம். இதை மனதில் வைத்து மோடி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கால்பந்து விளையாட்டின் சுலோகத்தை குறிப்பிட்டு மம்தா நேற்று பேசியிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்