மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க பொது முடக்கம் அமல்

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் கரோனா பரவல்அதிகமாக உள்ளதால் அங்குநேற்று முதல் ஒரு வாரத்துக்கு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மகாராஷ் டிரா வில்தான் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது. உயிரிழப்பிலும் முன்னிலை வகித்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு குறைந்து வந்தது.

ஆனால் கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமராவதி மாவட்டத்தில் தினமும் சுமார் 1,000 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதையடுத்து, அம்மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது முடக்கம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. வரும் மார்ச் 1-ம் தேதி காலை 8 மணி வரை இது நடைமுறையில் இருக்கும். இதன்படி, அனைத்து கடைகள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டிருக்கும். அதேநேரம் காலை 9 மணி முதல் 5 மணி வரையில் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் மட்டும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் மட்டும் 15 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்