கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (மார்க்சிஸ்ட் கூட்டணி) அமோக வேற்றி பெற்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், அம்மாநில தலைநகரில் பாஜக காலூன்றியிருக்கிறது.
மொத்தமுள்ள 941 கிராமப் பஞ்சாயத்துகளில் 551 இடங்களை இடதுசாரி ஜனநாயக முன்னணி கைப்பற்றியது; காங்கிரஸ் கூட்டணி 362 இடங்களையும், பாஜக 14 இடங்களையும், இதர கட்சிகள் 14 இடங்களையும் கைப்பற்றின.
கேரளத்திலுள்ள 86 நகராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 42 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக ஓர் இடத்தைக் கைப்பற்றியது. மூன்று இடங்களில் இழுபறி நீடித்தது.
மொத்தமுள்ள 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் தலா 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. மொத்தமுள்ள 152 டவுன் பஞ்சாயத்துகளில், இடதுசாரி கூட்டணி 90 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 61 இடங்களிலும், இதர கட்சி ஓர் இடத்திலும் வெற்றி பெற்றன.
மாநகராட்சிகளில்...
கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் கோழிக்கோடு, கொல்லம் ஆகிய மாநகராட்சிகளில் இடதுசாரி கூட்டணி கூடுதல் இடங்களை பெற்று, மேயர் பதவியை உறுதி செய்துள்ளது. திருச்சூரில் இடதுசாரி கூட்டணி 23, காங்கிரஸ் கூட்டணி 21, பாஜக கூட்டணி 6, சுயேட்சை 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இங்கும் மார்க்சிஸ்ட் கட்சியே மேயர் பதவியை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
எர்ணாகுளம் மேயர் பதவியை காங்கிரஸ் கூட்டணி பிடித்துள்ளது. கண்ணூர் மாநகராட்சியில் காங்கிரஸ் கூட்டணி 27 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கூட்டணி 27 இடங்களிலும், காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காத அதிருப்தியில் போட்டியிட்ட வேட்பாளர் 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.
காலூன்றிய பாஜக...
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கூட்டணி 42 இடங்களிலும், பாஜக கூட்டணி 34 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைக்கும் மூன்று இடம் கிடைத்துள்ளது.
தலைநகர் திருவனந்தபுரத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை மூன்றாவது இடத்துக்கு தள்ளி விட்டு, பாஜக இரண்டாவது இடம் வந்து காலூன்றியிருப்பது கவனிக்கத்தது.
காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவு
கேரளத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கடும் பின்னடைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தெளிவான பிரச்சார வியூகமே அடித்தளமிட்டது. உம்மன்சாண்டி அரசு மீதான சோலார் பேனல் ஊழல் குற்றச்சாட்டு, கேரள நிதி அமைச்சரும், கேரள காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கே.எம்.மாணி மீதான பார் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு ஆகியவை வாக்காளர்களது பார்வையை மார்க்சிஸ்ட் கட்சியின் மீது பதித்தது. அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தன் பிரச்சாரத்தின்போது பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தது. குறிப்பாக மாட்டிறைச்சி, சகிப்பின்மை விவகாரங்களைச் சொல்லலாம்.
ஆனால், காங்கிரஸ் கட்சி பாஜக அணி எடுக்கும் வாக்குகள் இடதுசாரி அணிக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என ஆழமாக நம்பியது. அதனால் அது பாஜகவை அதிக அளவில் விமர்சிக்க வில்லை. அதன் விளைவு தலைமை செயலகம் அமைந்துள்ள திருவனந்தபுரத்திலேயே ஆளும் காங்கிரஸ் கட்சியை பாஜகவே மூன்றாவது இடத்துக்கு தள்ளியது.
எஸ்.என்.டி.பி கட்சியை சேர்ந்த வெள்ளாப்பள்ளி நடேசன் உள்ளிட்ட சாதி அமைப்பினரையும் கூட்டணி சேர்த்து களம் கண்ட பாஜக, கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில் இந்த முறை முதல் முறையாக ஓரளவு இடங்களை பிடித்துள்ளது.
இடதுசாரிகள் உற்சாகம்
மாநில அளவில் அதிக இடங்களை மார்க்சிஸ்ட் கூட்டணி பிடித்துள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் கடந்த தேர்தலின் போது 40 இடங்களை பிடித்திருந்தது காங்கிரஸ். 51 இடங்களை பிடித்திருந்ததும கம்யூனிஸ்ட். இப்போது இந்த கட்சிகளுக்கு இணையாக தலைநகரில் பாஜக உருப்பெற்றுள்ளது. கேரள சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த உள்ளாட்சித் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. உள்ளாட்சி தேர்தலில் ஏறுமுகத்தால் உற்சாகத்தில் இருக்கின்றனர் கேரள இடதுசாரிகள்.
கேரள உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2 மற்றும் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டது.
கேரள மாநிலத்தில் 941 கிராம பஞ்சாயத்துகள், 152 டவுன் பஞ்சாயத்து, 14 மாவட்ட பஞ்சாயத்து, 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடந்தது. ஆளும் காங்கிரஸ், இடதுசாரி, பா.ஜ.க, என மும்முனை போட்டி நிலவியது.
கேரள மாநிலத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி சேர்மன் உள்ளிட்ட பதவிகளுக்கு பொது மக்கள் நேரடியாக வாக்களிக்க முடியாது. பொது மக்களால் தேர்வு செய்யப்படும் கவுன்சிலர்களே மேயர், சேர்மனை தேர்வு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago