முதியோர்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக தலைநகர் டெல்லி மாறி வருவதாக அச்சம் தெரிவிக்கப் படுகிறது. இங்கு கடந்த 3 ஆண்டு களில் 46 பேர் கொல்லப்பட்டுள்ள னர். இதனால் காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு அணுகும் முதியோர் எண்ணிக்கை உயர்ந் துள்ளது.
டெல்லியில் கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை 2 முதியோர் கொல்லப்பட்டனர். கிழக்கு டெல்லி யின் கைலாஷ் பகுதியில் வசித்து வந்த மனோகர் லால் மதன் (84), அவரது மனைவி விமலா (80) ஆகிய இருவரும் இரவில் தூங்கும் போது கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இவர்கள் வீட்டில் திருடு வதற்காக வந்தவர்கள் இவர்களை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இத்துடன் சேர்த்து இந்த ஆண்டு ஜனவரி முதல் டெல்லியில் இது வரை 12 முதியோர் கொல்லப்பட் டுள்ளனர். மத்திய குற்றப் பதிவேட்டு மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி கடந்த 2014-ம் ஆண்டில் இங்கு 22 முதியோர் கொல்லப்பட் டுள்ளனர். இதனால், நாட்டின் தலை நகரான டெல்லி, முதியோருக்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருவதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து டெல்லி காவல் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ராஜன் பகத் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “தனியாக வசித்து வரும் முதியோர், முன்பின் தெரியாதவர்களை எளிதில் நம்பி விடுவது இதற்கு முக்கிய காரண மாக உள்ளது. அவர்களிடம் உள்ள பணம் மற்றும் விலைமதிப்பு மிகுந்த பொருட்கள் பற்றி அறிந்து கொண்டு, திருடும் நோக்கத்தில் வருவோர், அவர்களை கொலையும் செய்து விடுகின்றனர். இதை முன்கூட்டியே தடுக்கும் வகையில் முதியோருக்கான பாது காப்புத் திட்டம் டெல்லியில் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது” என்றார்.
டெல்லி காவல்துறை சார்பில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி ‘முதியோர் பாதுகாப்புத் திட்டம்’ தொடங்கப்பட்டது. இத் திட்டத்தில் பதிவு செய்யும் முதி யோரை டெல்லி காவல் துறையின் இணை ஆணையர் தலைமையில் ஒரு குழு தொடர்ந்து கண்காணித்து வரும். இதற்கு அப்பகுதி காவல் நிலைய போலீஸாரின் உதவியை யும் பயன்படுத்திக் கொள்ளும்.
அந்த முதியோருடன் டெல்லி போலீஸார் அவ்வப்போது தொலைபேசியில் பேசி நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார்கள். இவர் களின் வீட்டு வேலைக்காக பணியமர்த்தப்படுவோரின் முகவரி களையும் சரிபார்த்து அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். இத்துடன் முதியோர் களின் உடல்நலம் உட்பட சில தனிப்பட்ட விஷயங்களிலும் அவர் கள் அனுமதியுடன் தலையிட்டு டெல்லி போலீஸ் உதவி வருகிறது. இவர்களுடன் இணைந்து டெல்லியின் பிரபல 6 முதியோர் நல அமைப்புகளும் முதியோருக்கு உதவி வருகின்றன.
டெல்லியில் முதியோருக்கு ஆபத்து அதிகரித்து வருவதால் அவர்களுக்கான பாதுகாப்பு திட்டத்தில் பதிவுசெய்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் அந்த திட்டத்தில் 3,164 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 23,982 பேர் பதிவு செய்துள்ளனர். இதன்மூலம், அதன் பதிவு எண்ணிக்கை 13.43 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago