கோவிட்-19; தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள்: மருத்துவ முன்கள பணியாளர்களுக்கு ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஒரு கோடிக்கும் அதிகமான மருத்துவ மற்றும் முன்கள பணியாளர்களுக்கு இதுவரை கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சமூகம் மற்றும் முன்கள பணியாளர்கள் கோவிட்-19 தடுப்பு மருந்து பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வேண்டுகோள் விடுத்தார்.

தடுப்பு மருந்தை நாடு முழுவதும் வழங்கும் நடவடிக்கை 2021 ஜனவரி 16 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், காவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

“1,01,88,007 தடுப்பூசிகளை வெறும் 34 நாட்களில் இந்தியா போட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை இவ்வளவு விரைவில் எட்டிய உலகத்திலேயே இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. இந்த முக்கிய மைல்கல்லை எட்டியதற்காக தொடர்புடைய அனைவரையும் பாராட்டுகிறேன்,” என்று அவர் கூறினார்.

ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பு மருந்துகளும் பரிசோதனைகளுக்கு பின்னர் முழுவதும் பாதுகாப்பானவை என்று சான்றளிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.

அடிப்படையில்லாத சில அவதூறு பிரச்சாரங்கள் குறித்து பேசிய அவர், அவை துரதிர்ஷ்டவசமானவை என்றார். ஒரு கோடி தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்