மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமனம்

By பிடிஐ

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நியமிக்க மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக கடந்த 6 ஆண்டுகள் இருந்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பதவிக் காலம் கடந்த 15-ம் தேதியோடு முடிந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஆலோசித்தது.

இதில் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே இருவரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாகத் தகவல்கள் கிடைத்தன. இதில் மல்லிகார்ஜுன கார்கேவை நியமிக்கலாம் என முடிவு செய்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்குக் கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதன் அடிப்படையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக கார்கேவை நியமிக்க வெங்கய்ய நாயுடு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவை வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், “மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிப்ரவரி 16-ம் தேதி முதல் நியமிக்க மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக மூத்த தலைவர் ஆனந்த் சர்மா இருந்து வந்தார். குலாம் நபி ஆசாத் பதவிக் காலம் முடிந்தபின் துணைத் தலைவராக இருந்த ஆனந்த் சர்மாவை காங்கிரஸ் தலைமை நியமித்திருக்கலாம்.

ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதி, காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைமை தேவை என்று கோரிய 23 தலைவர்களில் ஆனந்த் சர்மாவும் ஒருவர் என்பதால் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியில் ரயில்வே துறை அமைச்சராக இருந்தவர். கடந்த முறை பாஜக ஆட்சியி்ல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் மல்லிகார்ஜுன கார்கே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்