முதல் அமைச்சர் நிதிஷ்குமாரால் நீக்கப்பட்ட எம்.எல்.ஏவான அனந்த்சிங், பிஹார் மாநில தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ளார்.
கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இவர், ஐக்கிய ஜனதா கட்சி வேட்பாளரை தோற்கடித்துள்ளார். இவருடன் சேர்த்து நான்கு பேர் வென்றதை தொடர்ந்து இம் மாநிலத்தில் சுயேச்சைகள் ஆதிக்கம் தொடர்வது நிரூபனம் ஆகியுள்ளது.
பிஹாரின் மொகாமா தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்தவர் அனந்த்சிங். இவர், இம் மாநில கிரிமினல் அரசியல்வாதிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர். இவரது சமூகத்தை சேர்ந்த பெண்ணை கேலி செய்த இளஞரை கடத்தி கொலை செய்ததாக அனந்த்சிங் மீது கடைசியாக பதிவான புகார் ஆகும். இதனால், ஆளும்கட்சி எம்.எல்.ஏவாக இருந்தும் முதல் அமைச்சர் நித்திஷ்குமாரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் அனந்த்சிங்.
எனினும், தன் மீதான கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர், தாம் எம்.எல்.ஏவாக இருக்கும் மொகமா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இவருக்கு தன் மனுதாக்கல் செய்வதற்காக மட்டும் ஜாமீன் கிடைத்தது. அதன் பிறகு சிறையில் இருந்தபடி பிரச்சாரம் செய்தவர் 18,348 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளர் நீரஜ்குமாரை தோற்கடித்துள்ளார். இவருடன் சேர்த்து மேலும் ஒரு சுயேச்சை வெற்றி பெற்றுள்ளார். மேலும், இருவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி வகிக்கின்றனர்.
பிஹாரில் சுயேச்சை எம்.எல்.ஏக்கள் வெற்றி பெறுவது புதிய விஷயம் அல்ல. இவர்களில் பெரும்பாலானவர்கள் கிரிமினல் பட்டியலில் இடம் பெற்றவர்களாகவே வகித்து வந்தனர். இதனால், பிஹாரில் சிலமுறை தொங்குசபை ஏற்பட்ட போது இந்த சுயேச்சைகளின் பங்கு அதிகமாக இருந்தது. இதன் பிறகு ஆறு வருடங்களுக்கு மேல் சிறை தண்டணை அடைந்தவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என உச்ச நீதிமன்ற தடை விதிக்கப்பட்ட பின் சுயேச்சைகளாக கிரிமினல்கள் வெற்றி பெறுவது குறைந்து விட்டது.
அனந்த்சிங்கை கட்சியில் இருந்து நீக்கியது நித்திஷ்குமாருக்கு தேர்தலில் பெரும் ஆதரவை தேடித் தந்தது. ஆனால், இப்போது அனந்த்சிங் அவரது வேட்பாளரை சிறையில் இருந்தபடி தோற்கடித்தது ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago