உள்நாட்டு விமானக் கட்டணம் ரூ.5,600 வரை அதிகரிப்பு: 30 சதவீதம் வரை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு

By ஏஎன்ஐ

உள்நாட்டுக்குள் விமானப் பயணம் செய்வதே காஸ்ட்லி என்ற நிலை வந்துவிட்டது. விமான எரிபொருள் தொடர் விலை ஏற்றம் காரணமாக, உள்நாட்டு விமானப் பயணக் கட்டணம் அதிகபட்சமாக ரூ.5,600 வரை அதாவது 30 சதவீதம் வரை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''180 நிமிடங்கள் முதல் 210 நிமிடங்கள் வரை பயணம் மேற்கொள்ளும் விமானங்களுக்கான கட்டணம் ரூ.18,600 ஆக இருந்தநிலையில் 30 சதவீதம் அதாவது ரூ.5,600 உயர்த்தப்பட்டு ரூ.24,200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவாக 10 சதவீதம் அதாவது ரூ.200 மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை தொடர் ஏற்றம் காரணமாக விமான நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட இந்தக் கட்டண உயர்வு தேவையான ஒன்று. இந்தக் கட்டண உயர்வு வரும் மார்ச் 31-ம் தேதிவரை அல்லது மறு உத்தரவு வரும்வரை அமலில் இருக்கும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டணத்தின்படி, 40 நிமிட விமானப் பயணத்துக்கான குறைந்தபட்ச அடிப்படைக் கட்டணம் ரூ.2 ஆயிரத்திலிருந்து, 2,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணம் ரூ.6 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது ரூ.7,800 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வு மூலம் 280 நிமிடங்கள் பயணத்துக்கான குறைந்தபட்ச விமானப் பயணக் கட்டணம் ரூ.6,500 ஆக இருந்தது ரூ.7,200 ஆகவும், அதிகபட்சமாக ரூ.18,600 ஆக இருந்தது தற்போது ரூ.24,200 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் உள்நாட்டுப் பயணத்துக்கு நிலையான கட்டணத்தை அறிவித்திருந்தது. இப்போது அது நீக்கப்பட்டு மெல்ல விமானப் போக்குவரத்துக்கான சந்தை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்