வாரத்துக்கு 4 நாட்கள் வேலை; 3 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு: தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்

By செய்திப்பிரிவு

வாரத்துக்கு 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் திட்டத்தை மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

தற்போது வாரத்துக்கு 6 நாட்கள் அல்லது 5 நாட்கள் வேலை நாட்கள் எனும் முறை நடைமுறையில் இருக்கிறது. தொழிலாளர் சட்டத்தில் புதிய விதிகளைச் சேர்த்து வந்து 4 நாட்கள் மட்டுமே வேலை, அந்த 4 நாட்களும் நாள்தோறும் 12 மணி நேரம் வேலை நேரம் என்ற திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டத்தில் இதற்கான விதிகளை மத்திய அரசு உறுதி செய்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலாளர் அபூர்வா சந்திரா கூறுகையில், “தொழிலாளர் சட்டத்தில் புதிய விதிகளை உருவாக்கியுள்ளோம். இதன்படி, நிறுவனங்கள் இனிமேல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை வைக்கலாம். மீதமுள்ள 3 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அனுமதிக்கப்படும். ஆனால், வேலை நாள் நாள்தோறும் 12 மணி நேரமாக இருக்கும்.

வாரத்தில் வேலை நாட்கள் குறையும்போது, வேலை செய்யும் நேரமும் அதிகரிக்கும். வாரத்துக்கு 48 மணி நேரம் பணியாற்ற வேண்டியது இருக்கும். இதன்படி நாள்தோறும் 12 மணி நேரம் 4 நாட்களுக்குப் பணியாற்ற வேண்டும். இந்த விதிகளை நிறுவனங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அரசு நிர்பந்தம் செய்யாது. விரும்பினால், நிறுவனங்கள் இந்த விதிகளைச் செயல்படுத்திக் கொள்ளலாம்.

.

இந்தப் புதிய விதிகளை உருவாக்குவது தொடர்பாக அனைத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் முழுமையாக முடிந்துவிடும். ஊதியத்துக்கான விதி, தொழிற்துறை உறவுகள், பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணியாற்றும் சூழல் மற்றும் சமூகப் பாதுகாப்பு விதி ஆகியவற்றஒ விரைவில் அரசு வெளியிடும்” எனத் தெரிவித்தார்.

தொழிலாளர் சட்டத்தில் இதற்கான விதிகள் உருவாக்கப்பட்டு இறுதி செய்யப்படும் நிலையில் இருப்பதால், விரைவில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. இந்த விதிகளை அரசு உருவாக்கி நடைமுறைப்படுத்திவிட்டால் இதைச் செயல்படுத்த நிறுவனங்கள் அரசிடம் முன் அனுமதி பெறத் தேவையில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்