இந்தியாவில் 62.6 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து பலமடங்கு குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 9,110 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 1.43 லட்சமாக (1,43,625) குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை இந்தியாவின் மொத்த பாதிப்பில் 1.32 சதவீதம்.
» பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி; இந்திய முஸ்லிமாக எனக்கு பெருமை: குலாம் நபி ஆசாத் பெருமிதம்
» மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத்துக்கு பிரியாவிடை: கண் கலங்கிய பிரதமர் மோடி
இதுவரை மொத்தம் 1.05 (1,05,48,521) கோடி பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 14,016 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் வீதம் 97.25 சதவீதமாக உள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா, பிரேசில், ஜெர்மனி ஆகிய நாடுகளில் குணமடைந்தோர் வீதம் இந்தியாவை விட குறைவாக உள்ளது.
இந்தியாவின் தினசரி கோவிட் உயிரிழப்பும் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஜனவரி 2வது வாரத்தில் 211 ஆக இருந்த தினசரி சராசரி உயிரிழப்பு, பிப்ரவரி 2வது வாரத்தில் 96 ஆகக் குறைந்துள்ளது. இது 55 சதவீதம் குறைவு. இந்தியாவின் கொவிட் உயிரிழப்பு வீதம் 1.43 சதவீதமாக உள்ளது. உலக சராசரி 2.18 சதவீதமாக உள்ளது.
பிப்ரவரி 9ம் தேதி காலை 8 மணி வரை, 62.6 லட்சம் பேருக்கு (62,59,008) கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 54,82,102 பேர் சுகாதாரப் பணியாளர்கள், 7,76,906 பேர் முன்களப் பணியாளர்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 4 நாட்களாக உயிரிழப்பு எண்ணிக்கை 100க்கும் குறைவாக உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago