உத்தரப் பிரதேசத்தில் குற்றங்கள் அதிகரித்துவருவதால் அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
பிற மாநிலங்களின் குற்றப் பதிவுகளை ஆராய்ச்சி செய்வது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் அவர் மீது செலவு விதிக்க வேண்டும் என்று மனுதாரர்-வழக்கறிஞரை உயர் நீதிமன்றம் எச்சரித்தது.
உத்தரப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவைர் ஆட்சி கோரியுள்ள மனுதாரர்-வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் இதுகுறித்து தனது மனுவில் கூறுகையில், ''அதிகரிக்கும் குற்றச் செயல்களால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. அரசியலமைப்பின் விதிகளின்படி உத்தரப் பிரதேச அரசை தொடர அனுமதிக்கக்கூடாது. அரசியலமைப்பின் 356 வது பிரிவு விதிகளைப் பயன்படுத்தி உ.பி.ஆட்சியைக் கலைத்து இந்திய ஜனநாயகத்தையும் 20 கோடி மக்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டியது அவசியம்" என்று அவர் கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி போப்டே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மனுதாரர்-வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
» கரோனா உயிரிழப்பு தொடர்ந்து குறைகிறது; 150- க்கும் கீழ் சரிந்தது
» யாருக்கும் எதுவும் தெரியாது; முட்டாள்களா? - பிரதமர் மோடிக்கு கார்கே கேள்வி
காணொலி நடத்தப்பட்ட விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நேரில் ஆஜராகி மனுதாரர் வழக்கறிஞர் சுகின் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
சுகின் தனது வாதத்தின்போது, ''உத்தரபிரதேசத்தில் காவல்துறையினரே சட்டவிரோத மற்றும் தன்னிச்சையான கொலைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் உ.பியில் அரசியலமைப்பு இயந்திரங்கள் முறிக்கப்பட்டுள்ளன.
தேசிய குற்ற ஆவணப் பணியகம் (என்.சி.ஆர்.பி) மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) ஆகியவற்றின் தரவுகளின் படி இதுகுறித்து நான் ஆராய்ச்சி செய்துள்ளேன். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது உத்தரப் பிரதேசத்தில் குற்றத்தின் வரைபடம் (crime graph) உயர்ந்துள்ளது'' என்றும் கூறினார்.
"நீங்கள் எத்தனை மாநிலங்களில் குற்றப் பதிவைப் பற்றி படித்திருக்கிறீர்கள்? மற்ற மாநிலங்களின் குற்றப் பதிவுகளைப் படித்திருக்கிறீர்களா? மற்ற மாநிலங்களில் குற்றப் பதிவுகளைப் பற்றிய உங்கள் ஆராய்ச்சி என்ன? இதை நீங்கள் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று எங்களுக்குக் காட்டுங்கள்" என்று அமர்வு கூறியது.
சுகின் வாதங்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் ''அவர் கூறி வரும் கூற்றுக்கள் குறித்து அவர் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை'' என்று தெரிவித்தனர். "நீங்கள் மேலும் வாதிட்டால் நாங்கள் உங்கள் மீது பெரிய அளவில் அபராதம் சுமத்துவோம்" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago