கரோனா உயிரிழப்பு தொடர்ந்து குறைகிறது; 150- க்கும் கீழ் சரிந்தது

By செய்திப்பிரிவு

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மற்றொரு முக்கிய சாதனையாக கடந்த 10 நாட்களாக நாட்டில் அன்றாட உயிரிழப்புகள் தொடர்ந்து 150 க்கும் குறைவாகவே பதிவாகி வருகின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் 84 உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.தரமான மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளுடன் கண்காணிப்பு, கட்டுப்பாடு, பரிசோதனை நடவடிக்கைகளினால், உயிரிழப்புகள், தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹவேலி, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, லட்சத்தீவுகள், லடாக் (யூனியன் பிரதேசம்), சிக்கிம், ராஜஸ்தான், மேகாலயா, மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, அசாம் ஆகிய 17 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,48,609 ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.37 சதவீதம் மட்டுமே ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 11,831 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11,904 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பிப்ரவரி 8, 2021 காலை 8 மணி வரை, தமிழகத்தில் 1,66,408 பேர், புதுச்சேரியில் 3,532 பேர் உட்பட, நாடு முழுவதும் 58 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு (58,12,362) கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,304 முகாம்களில் 36,804 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 1,16,487 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.05 கோடியைக் கடந்துள்ளது (1,05,34,505). பாதிக்கப்பட்டோருக்கும், குணமடைந்தோருக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 1,03,85,896 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.20 சதவீதமாக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்