பிரதமர் மோடியின் மாநிலங்களவை உரையில் வலிமையான கருத்துகள் எதுவும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று பேசினார். அப்போது கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வந்தது குறித்தும், எடுத்த நடவடிக்கைகள், தடுப்பு முயற்சிகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் ‘‘வேளாண் சட்டங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதை இந்த சபையில் நான் மீண்டும் படிக்க விரும்புகிறேன். வேளாண் சட்டங்கள் தொடர்பாக தற்போது யு-டர்ன் செய்திருப்பவர்களும் இதற்கு ஒப்புக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
கடந்த 1930-களில் அமைக்கப்பட்ட சந்தைப்படுத்துதல் முறையால், நமது விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை அதிகமான லாபத்துக்கு விற்பனை செய்வது தடுக்கப்படுகிறது.
அனைத்துவிதமான தடைகளையும் நீக்குவதே எங்களுடைய நோக்கம். பரந்த அடிப்படையிலான பொதுவான ஓர் சந்தையை இந்தியா நடைமுறைப்படுத்த வேண்டும்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சுதந்திரமாக விற்பனை செய்ய ஒரு சந்தை மட்டும் இருக்க வேண்டும் என்பதில் மன்மோகன் சிங் தனது நிலைப்பாட்டை தெளிவாகக் கூறிவிட்டார். மன்மோகன் சிங் என்ன கூறினாரோ அதை மோடி இன்று செய்துவிட்டதை நினைத்து நீங்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.’’ எனக் கூறினார்.
இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
பிரதமர் மோடியின் மாநிலங்களவை உரையில் வலிமையான கருத்துகள் எதுவும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பையும் மீறி விவசாயச் சட்டங்களை கொண்டு வந்தார்.
விவசாயிகள், பட்டதாரிகள், விஞ்ஞானிகள் என யாருடைய கவலையை பற்றியும் அவர் கேட்பதாக இல்லை. யாருக்கும் எதுவும் தெரியாது என எண்ணுகிறார்கள். நாம் என்ன முட்டாள்களா,’’ எனக் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago