டெல்லியில் உயர்ந்த ரகங்களின் நாய்களை விற்பதாகக் கூறி இணையதளங்களில் மோசடி செய்த இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
வீட்டு விலங்கான நாய்கள் வளர்ப்பு டெல்லியில் அதிகமாகி வருகிறது. வெளிநாட்டு வகைகள் உட்பட பல்வேறு உயர்ந்த ரக நாய்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டும் டெல்லிவாசிகள் அதற்காக, லட்சக்கணக்கான ரூபாய்களும் செலவழிக்கத் தயாராகி விடுகின்றனர். இந்த மனநிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய மோஹித்குமார்(23), அர்விந்த்குமார்(22) ஆகிய இருவரும் ஒரு இணையதளம் துவங்கி நாய்கள் விற்பனை செய்வதாக அறிவித்திருந்தனர். இதை பார்த்து ஏமாந்த பல டெல்லிவாசிகள் அவர்களிடம் நாய்களை வாங்க இணையதளத்தில் முன் வந்தனர்.
இவர்கள் பெறும் நாய்களின் விலை அதிகம் என்பதால் அதற்கான முன்பணம் வங்கி மூலம் அனுப்ப வேண்டும் எனவும், மீதியை வீட்டில் நாயை அனுப்பி வைக்கும் போது அளிக்கும்படியும் கூறப்பட்டது. இதை நம்பி ஏமாந்த பலர் முன்பணம் செலுத்த, அத்துடன் அவர்களுடனான தொடர்பை துண்டித்துள்ளனர். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணம் பெற்ற பின் மற்றொரு இணையதளம் துவக்கி நடத்தியுள்ளனர். இவர்கள் மீது வந்த சில புகார்களின் அடிப்படையில் கிழக்கு டெல்லியின் கர்வால் நகர்வாசிகளான மோஹித் மற்றும் அர்விந்த் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கிழக்கு டெல்லி பகுதியின் காவல்துறையின் துணை ஆணையரான பி.எஸ்.குர்ஜர் கூறுகையில், ‘பலரும் வெட்கப்பட்டு புகார் அளிக்க முன்வராதமையால் இருவரும் பல மாதங்களாக பலரையும் ஏமாற்றி வந்தனர். நாய்களின் வகைகளின் மீதான அறிவு இருவருக்கும் அதிகம் இருந்தமையால் பலருக்கு சந்தேகம் வராமல் இருந்திருக்கிறது. இதை வைத்து நாய் வளர்ப்பு மீதும் பல சந்தேகங்களை இலவசமாக இணையதளத்திலேயே தீர்த்து வைத்தது அவர்கள் மீது நம்பிக்கையை வளர்த்துள்ளது.’ எனத் தெரிவித்தார்.
இருவர் மீதும் பணமோசடி பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் ஏமாற்றிய தொகை விவரம் வெளியிடப்படவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago