50- வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி: அடுத்த மாதம் முதல் வழங்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

அடுத்த மாதம் முதல் 50- வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி வழங்கும் முதற்கட்டப் பணி தொடங்கியது. பிரதமர் மோடி இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். பாரத் பயோடெக் நிறுவனத் தயாரிப்பான கோவேக்சின், சீரம் இன்ஸ்டிட்டியூட்டின் கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நிலவரப்படி 54,16,849 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தநிலையில் 50- வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் மக்களவையில் நேற்று கூறியதாவது:

மூன்றாவது கட்டமாக கரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. அதில், 50 வயது மற்றும் அதை கடந்தவர்களுக்கும், இதர நோய்களால் பாதிக்கப்பட்ட 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும். இப்பிரிவினரில் மொத்தம் 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

இப்பணி தொடங்கும் தேதி மார்ச் மாதத்தில் எந்த வாரத்திலும் பணி தொடங்கும். அனேகமாக, 2-வது, 3-வது அல்லது 4-வது வாரத்தில் தொடங்கும். தடுப்பூசி பணிக்கு பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்