குஜராத், அசாமில் மார்ச் 1-ம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. அகமது படேல், பாஜக எம்.பி. அபய் பரத்வாஜ் ஆகியோர் மறைவால் குஜராத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இரண்டு மாநிலங்களவைத் தொகுதிகள் காலியாகின. கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி அன்று அகமது படேல் மறைந்தார். அவரைத் தொடர்ந்து அபய் பரத்வாஜ் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி காலமானார்.
படேல் மற்றும் பரத்வாஜின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலங்கள் முறையே ஆகஸ்ட் 2023 மற்றும் ஜூன் 2026இல் முடிவடையும்.
கடந்த ஆண்டு நவம்பரில் தனி போடோ மக்கள் முன்னணி எம்.பி. பிஸ்வாஜித் டைமரி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அசாமில் ஒரு மாநிலங்களவைத் தொகுதி காலியானது. அவரது பதவிக்காலம் 2026 ஏப்ரலில் முடிவடைய இருந்தது.
» வரவேற்க வந்தவர்களை பிடித்த காவல்துறை; கண்டித்து தர்ணா செய்த பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத்
இடைத்தேர்தலுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்படும். காலியிடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் மார்ச் 1-ம் தேதி நடைபெறும்.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை வாக்கு எண்ணிக்கை மார்ச் 1-ம் தேதி மாலை நடைபெறும். தேர்தல் நடைமுறை விதிகளின்படி, தேர்தல் நடைபெறும் நாளிலேயே மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago