கிராம கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் குறித்த கனிமொழி எம்.பி.யின் கேள்விக்கு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதிலளித்துள்ளார்.
மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாயா கிராம கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாவட்ட ரீதியாகப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள், வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர்? எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. அடிப்படையில் எவ்வளவு பேருக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது” என்று நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி மக்களவையில் எழுத்துபூர்வமாகக் கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்த பதிலில், “தூத்துக்குடி மாவட்டத்தில் தீனதயாள் உபாத்யாயா கிராம கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை 300 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 169 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் ஐ.டி. துறையில் 52 பேர், சுகாதாரத் துறையில் 3 பேர், ஜவுளி, கைத்தறி உள்ளிட்ட துறைகளில் 15 பேர், மற்ற துறைகளில் 99 பேர் என்று தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 169 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுதும் இந்தத் திட்டத்தின் கீழ் 11,655 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. 5,692 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது. எஸ்.சி. பிரிவில் 2,642 பேருக்கும், எஸ்.டி. பிரிவில் 162 பேருக்கும் வேலை அளிக்கப்பட்டது. ஓ.பி.சி. பிரிவில் 1877 பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago