உலகில் பல சர்வாதிகாரிகளின் பெயர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் “எம்” எழுத்தில் ஏன் தொடங்குகின்றன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், இந்த ட்விட்டருக்கான விளக்கத்தையும், ஏன் இந்தியில் ட்விட்டர் பதிவை வெளியிட்டார் என்பதையும் ராகுல் காந்தி தெரிவிக்கவில்லை.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கருத்துகளைக் கூறி வருகிறார். டெல்லியில் விவசாயிகள் போராடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, அங்கு தடுப்புகள் அமைக்கப்படுவதை நேற்று விமர்சித்த ராகுல் காந்தி, பாலங்களை எழுப்புங்கள், சுவர்களை அல்ல என மத்திய அரசுக்கு அறிவுரை கூறியிருந்தார்.
விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்துகளைத் தெரிவித்துவந்த 250 பேரின் ட்விட்டர் கணக்குகள் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் உத்தரவுப்படி முடக்கப்பட்டது குறித்தும் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.
» பிரமாண்டமான ஏரோ இந்தியா 2021 கண்காட்சி: பெங்களூருவில் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்
» இந்தியாவில் கரோனா பாதிப்பு: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,60,057 ஆகக் குறைவு
எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "சீனா என்ற வார்த்தையைச் சொல்வதற்குக் கூட நம் பிரதமர் பயப்படுகையில், சீனா தொடர்ந்து தனது படைகளைத் தயார் செய்யவும், கட்டமைக்கவும், நிலைநிறுத்தவும் செய்கிறது. ஒரு பேரழிவைத் தவிர்க்க உறுதியான நடவடிக்கை தேவை. துரதிர்ஷ்டவசமாக மோடிக்கு தைரியம் இல்லை" என்று பதிவு செய்திருந்தார்.
மேலும் அதனுடன், எல்லையில் சீனா படைகளை நிலைநிறுத்துவது தொடர்பாக வெளியான செய்தியையும் அதில் பதிவேற்றம் செய்திருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “உலகில் பல சர்வாதிகாரிகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் “எம்” எழுத்தில் ஏன் தொடங்குகின்றன. மார்கோஸ், முசோலினி, மிலோஸ்விக், மோபுட்டோ, முஷாரப், மிகோம்பிரோ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago