மருத்துவமனையில் இருந்து இளவரசி டிஸ்சார்ஜ்: மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்

By இரா.வினோத்

கரோனா வைரஸ் தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளவரசி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசி பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 21-ம் தேதி சசிகலாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்
பட்ட நிலையில் அவருடன் தங்கியிருந்த இளவரசிக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கும் அறிகுறிகள் அற்ற கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இளவரசி கடந்த 23-ம் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு
மதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக மருத்துவர்கள் கரோனா தொற்றுக்கான சிகிச்சைகளை வழங்கியதால் அவர் பூரண குணமடைந்தார். இதையடுத்து இளவரசி நேற்று மாலை 4 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இளவரசியின் தண்டனைக் காலம் இன்னும் நிறைவடையாததால், போலீஸார் அவரை தனி ஆம்புலன்ஸில் பாதுகாப்பாக பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அழைத்துச் சென்றனர். இளவரசி 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வலியுறுத்தப்பட்டிருப்பதால் சிறை அதிகாரிகள் அவரை தனி அறையில் அடைத்துள்ளனர். இதனிடையே இளவரசியின் தண்டனைக் காலம் பிப்ரவரி 5-ம் தேதியுடன் நிறைவடைவதால், அவர் அன்று காலை விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்