8 மாதங்களுக்குப் பிறகு கரோனா உயிரிழப்புகள் 100-க்கும் குறைவாக பதிவு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா தொற்றின் அன்றாட புதிய பாதிப்புகள் தொடர்ந்து சரிந்து வருகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி 95,735 ஆக இருந்த பாதிப்பு, இன்று 8,635 ஆகக் குறைந்துள்ளது. கடந்த எட்டு மாதங்களில் ஏற்பட்ட பாதிப்பில் இது மிகவும் குறைந்ததாகும்.

அன்றாட சராசரி தொற்று பாதிப்பு கடந்த ஐந்து வாரங்களில் வெகுவாகக் குறைந்து வருகிறது. டிசம்பர் 30, 2020 - ஜனவரி 5, 2021 வரையிலான காலகட்டத்தில் 18,934 ஆக இருந்த தினசரி சராசரி பாதிப்பு, ஜனவரி 27- பிப்ரவரி 2 வரையிலான காலகட்டத்தில் 12,772 ஆகக் குறைந்துள்ளது.

மற்றொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக கடந்த 24 மணி நேரத்தில் 100-க்கும் குறைவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த எட்டரை மாதங்களில் இதுவே குறைந்த எண்ணிக்கையாகும். முன்னதாக கடந்த ஆண்டு மே 15-ஆம் தேதி 100 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,516 முகாம்களில் 1,91,313 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 72,731 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அன்றாடம் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளும் பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 13,423 பேர் குணமடைந்துள்ளனர்.

85.09 சதவீத புதிய பாதிப்புகள் 10 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளன.

தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 5,215 பேர் ஒரே நாளில் புதிதாக குணமடைந்துள்ளனர்.

நேற்று கேரளாவில் 3,459 பேரும், மகாராஷ்டிராவில் 1,948 பேரும், தமிழகத்தில் 502 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கேரளாவிலும் மகாராஷ்டிராவிலும் கோவிட்-19 மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அங்கு விரைந்து அனுப்பியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 94 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்