காஷ்மீர் எல்லைக் கிராமத்தில் பாகிஸ்தான் தாக்குதல்; 2020-ல் மட்டும் 5400 க்கும் மேற்பட்ட போர்நிறுத்த மீறல்கள்: அதிகாரிகள் தகவல்

காஷ்மீர் சர்வதேச எல்லைக் கிராமத்தை நோக்கி பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தானிய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு சூட்டில் ஈடுபட்டது. இதில் 20 வயது இளைஞர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெவித்தனர்.

இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஷாப்பூர் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் ராணுவ நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியது. எல்லையோர கிராமத்தை நோக்கியும் அத்துமீறி மோர்டார்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 20 வயது இளைஞர் ஒருவர்காயமடைந்தார்.

காயமடைந்தவர் ஷாப்பூர் கிராமத்தில் வசிக்கும் முகமது இக்லக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீரில் 5,400 க்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தானால் போர்நிறுத்தம் மீறப்பட்டுள்ளது. இது கடந்த 19 ஆண்டுகளில் அதிகபட்சமானதாகும். கடந்த ஆண்டில் போர் நிறுத்த மீறல்கள் காரணமாக மொத்தம் 36 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள்.

கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் துருப்புக்கள் நடத்திய துப்பாக்கிச் சூடுகள் மிகமிக மோசமானவை. இது கிட்டத்தட்ட 2003 இந்தியா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தை தேவையற்றதாக ஆக்கியது.

பாகிஸ்தானிய துருப்புக்கள் பலமுறை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் உள்ள ராணுநிலைகளை நோக்கியும் கிராமங்களை குறிவைத்தும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இது மக்களிடையே ஒரு அச்ச மனநிலையை உருவாக்குவதோடு, எல்லைக்கோடு அமைதியை சீர்குலைக்கும்.

இவ்வாறு காவல்துறை துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE