விவசாயிகள் போராடும் டெல்லி திக்ரி, சிங்கு எல்லையில் ஏராளமான போலீஸார், துணை ராணுவம் குவிப்பு

By பிடிஐ


டெல்லி திக்ரி, சிங்கு எல்லைகள், உத்தரப்பிரதேசம் மீரட் எக்ஸ்பிரஸ் சாலை, காஜியாபாத் எல்லையில் விவசாயிகள் போராடும் இடத்தில் ஏராளமான போலீஸார், துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

குடியரசு தினத்தன்று, டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து விவசாயிகள் போராடும் இடத்தில் போலீஸார், துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி எல்லையில் பல்வேறு சாலைகளும் மூடப்பட்டு மாற்றுப் பாதையில் செல்ல வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி மீரட் எக்ஸ்பிரஸ் சாலையில் பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அங்கிருந்து வெளியேற வேண்டும் எனக் கோரி காஜியாபாத் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி. மீரட் எக்ஸ்பிரஸ் சாலையில் விவசாயிகள் குவிந்துள்ள காட்சி

காஜிப்பூரில் உள்ள உத்தரப்பிரதேச கேட் பகுதியில் விவசாயிகள் போராடும் இடத்தில் நேற்று இரவு முதல் தொடர் மின்வெட்டு செய்யப்பட்டு போாரடும் விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக விவசாயிகள் சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு போலீஸார் தரப்பிலும், உள்ளூநர் கிராம மக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு விவசாயிகளை வெளியேற்ற முயற்சிகள் நடக்கின்றன என்று விவசாயிகள் தரப்பில் தெரிவி்க்கப்படுகிறது

சிங்கு எல்லையில் போராடி வரும் மகிளா கிசான் அதிகார் மஞ்ச் தலைவர் கவிதா குருகந்தி கூறுகையில் “ அனைத்துப் பகுதியிலிருந்தும் அரசாங்கம் நெருக்கடி கொடுத்து எங்கள் போராட்டத்தை முடிக்க முயல்கிறது.

பல்வேறு பகுதிகளி்ல் இருந்து எங்களுக்கு வரும் உணவுப்பொருட்களை வரவிடாமல் தடுக்கிறது. தொலைத்தொடர்பு, இன்டர்நெட் வசதிகள் ரத்து செய்யப்படுகின்றன. உள்ளூர் மக்களை எங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு எங்களை அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்தார்.


இதற்கிடையே நேற்று நள்ளிரவரு காஜியாபாத் மாவட்ட ஆட்சியர் அஜய் சங்கர் பாண்டே, காவல்துறை கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி ஆகியோர் விவசாயிகள் போராடும் இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

விவசாயிகள் போராடும் உ.பி. மீரட் எக்ஸ்பிரஸ் சாலைப்பகுதியில் நேற்று முதல் கலவரத் தடுப்பு வாகனங்கள், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களும், நூற்றுக்கணக்கான போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்