டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறையில் போலீஸார் காட்டிய துணிச்சலையும், உறுதியையும் கண்டு ஒட்டுமொத்த நாடும் பெருமையடைகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் டிராக்டர் பேரணியில் நடந்தவன்முறை சம்பவங்களின் போதுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீஸாரை மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
வேளாண்சட்டங்களுக்கு எதிராக கடந்த2மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம்நடத்தி வருகின்றனர். குடியரசுதினமான நேற்று டெல்லியில்டிராக்டர் பேரணி நடத்த முடிவுசெய்யப்பட்டது. டிராக்டர் செல்ல தனியான வழித்தடத்தை டெல்லி போலீஸார் உருவாக்கி இருந்தனர். ஆனால்,விவசாயிகளில் ஒரு பிரிவினர் மத்திய டெல்லிக்குள் போலீஸாரின் தடையை மீறி நுழைந்தனர்.
இதில் போலீஸாருக்கும், விவசாயிகளில் ஒருபிரிவினருக்கும் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர்.
டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடிஏற்றும் இடத்தில், சுதந்திரதினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்தில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்.
டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 83 போலீஸார்காயமடைந்தனர் .
இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீஸார் சார்பில்15முதல் தகவல்அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்முறை சம்பவங்களின்போது காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீஸாரைமத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா நேற்று சென்று பார்வையிட்டார்.
சுஷ்ருதா மருத்துவ மையம் மற்றும் தீரத்ராம் மருத்துவமனைக்கு சென்ற அமித் ஷா, அங்கு சிகிச்சை பெற்று வரும் காவலர்களை சந்தித்து, அவர்களின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
“டெல்லி காவல் துறையின் தீரமிகு காவலர்களை இன்று மருத்துவமனையில் சந்தித்து, அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினேன். குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறையில் அவர்கள் காட்டிய துணிச்சலையும், உறுதியையும் கண்டு ஒட்டுமொத்த நாடும் பெருமையடைகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago