டெல்லி வன்முறை: மேதா பட்கர், யோகேந்திர யாதவ், உள்பட 37 பேர் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு

By பிடிஐ


டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறை தொடர்பாக மேதா பட்கர், தேவேந்திர யாதவ், ராகேஷ் திகெய்த் உள்ளிட்ட 37 தலைவர்கள் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. போலீஸாருக்கும் , விவசாயிகளில் ஒருபிரிவினருக்கும் இடையே நடந்த மோதலில் 100-க்கும்மேற்பட்ட போலீஸாரும், விவசாயிகளும் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பாக டெல்லி போலீஸார் 25 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, முதல்கட்டமாக 20பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 394 காவலர்கள் காயமடைந்துள்ளனர், விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆதலால் இந்த கலவரத்தில் விவசாயிகள் தலைவர்களுக்கு இருக்கும் தொடர்பு குறித்து விசாரிக்கப்படும் என்று டெல்லி போலீஸார் நேற்று அறிவித்தனர்.

டெல்லியில் உள்ள சமயபூர் பத்லி காவல் நிலையத்தில் அடையாள் தெரியா நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தின் போது இந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்களிடம் இருந்து 10 ரவுண்டு தோட்டாக்கள், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசும் துப்பாக்கிளை பிடுங்கிச் சென்றதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தலைவர்கள் மேத்தா பட்கர், யோகேந்திர யாதவ், தர்ஷன் பால், குர்னம் சிங் சாந்துனி, ராகேஷ் திக்கெய்த், குல்வந்த் சிங் சாந்து, சத்னம் சிங் பன்னு, ஜோகிந்தர் சிங் உக்ரஹா, சுர்ஜித் சிங் பூல், ஜக்ஜீத் சிங் தாலேவால், பல்வீர் சிங் ராஜேவால், ஹரிந்தர் சிங் லஹோவால் ஆகியோர் மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீது ஐபிசி பிரிவு 307(கொலைமுயற்சி), 147(கலவரத்தை தூண்டுதல்), 353பிரிவு(அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், தாக்குதல்), 120பி(குற்றச்சதி) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலவரத்தில் டெல்லி போலீஸார் தரப்பில் 394 காவலர்கள் காயமடைந்தனர், 30 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன, 428 தடுப்புகள் சிதைக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்