திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் அனுமதி; தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம்

By செய்திப்பிரிவு

கரோனாவை தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி மாதமும் நீட்டிக்கப்படுகிறது. அதேசமயம் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் அனுமதிக்கலாம் என கூடுதல் தளர்வை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கரோனா பரவலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 24ம் தேதி பிறப்பித்த உத்தரவுகள், தளர்த்தப்பட்டு வருவதால், கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே கிட்டதட்ட அனைத்து நடவடிக்கைகளும், படிப்படியாக தொடங்கி நடந்து வருகின்றன.

மக்கள் அதிகளவில் கூடும் சில நடவடிக்கைகளுக்கு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக சில கட்டுப்பாடுகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, பிப்ரவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் அனுமதிக்கலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டும் நெறிமுறைகளை மாநில அரசுகள் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே நீச்சல் குளம் உள்ளிட்டவற்றிக்கும் வழிகாட்டும் நெறிமுறைகளை மாநில அரசுகள் அறிவிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் இந்தியாவில் வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும், உருமாறிய கரோனா அச்சுறுத்தலாலே முன்னெச்சரிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்