ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 மாவோயிஸ்ட்களை அம்மாநில போலீஸார் நேற்று திருப்பதி அடுத்துள்ள மதனபல்லியில் கைது செய்தனர். போலீஸார் வருவதை அறிந்து மதனபல்லியில் பதுங்கி இருந்த மேலும் 4 பேர் தப்பி தலைமறைவாகி உள்ளனர்.
இது குறித்து மதனபல்லி காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரசாத் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 6 மாவோயிஸ்ட்கள் 6 மாதங்களுக்கு முன்னர், திருப்பதி அடுத்துள்ள மதனபல்லியில் சாதாரண கூலி ஆட்கள் போன்று ஒரு பிளாஸ்டிக் தொழிற் சாலையில் பணிக்கு சேர்ந்துள் ளனர். அவர்கள் மீது ஜார்கண்டில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று மதனபல்லி போலீஸாரின் துணையுடன் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் அதிரடியாக நுழைந்து கோவிந்த யாதவ் (25) என்பவரையும் மற்றொரு நபரையும் கைது செய்தனர், என்றார். மற்ற 4 பேர் போலீஸார் வருவதை அறிந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க தனி படை அமைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கோவிந்த் யாதவ், கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை முக்தி மோச்சா கட்சியில் இணைந்து பணியாற்றி உள்ளார். மாவோயிஸ்ட் கமாண்டோவான கோவிந்த் யாதவ் மீது 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் குறித்து தகவல் கொடுப்போருக்கு அம்மாநில அரசு ரூ. 5 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago