பறவைக்காய்ச்சல்; அழிக்கப்பட்ட பண்ணை பறவைகள், முட்டைகள் இழப்பீடு

By செய்திப்பிரிவு

பறவைக்காய்ச்சல் எதிரொலியாக அரசால் அழிக்கப்பட்ட பண்ணை பறவைகள், முட்டைகள் மற்றும் பண்ணை தீவனங்களுக்கான இழப்பீடு அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

2021 ஜனவரி 23-இன் படி, ஒன்பது மாநிலங்களில் (சத்திஸ்கர், ஹரியாணா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப்) உள்ள பண்ணை பறவைகளில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

12 மாநிலங்களில் (சத்திஸ்கர், ஹரியானா, தில்லி, ஜம்மு காஷ்மீர், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்) காகம், இடம்பெயர்ந்த காட்டு பறவைகளில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் மற்றும் கேரளாவில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசால் அழிக்கப்பட்ட பண்ணை பறவைகள், முட்டைகள் மற்றும் பண்ணை தீவனங்களுக்கான இழப்பீடு அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

பறவை காய்ச்சல் 2021-ன் தயார்நிலை, கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான திருத்தப்பட்ட செயல்திட்டத்தின் படி தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் தினமும் தகவல்களை வழங்கி வருகின்றன. சமூக ஊடகம் (ட்விட்டர், முகநூல்) உள்ளிட்ட பல்வேறு தளங்களின் மூலம் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை எடுத்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்