இங்கிலாந்திலிருந்து பரவி வரும் உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 150 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உருமாறிய கரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதியிலிருந்து 2021, ஜனவரி 6-ம் தேதி வரை பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை இந்தியா நிறுத்தி வைத்தது.
இந்நிலையில் ஜனவரி 8 முதல் மீண்டும் விமானச் சேவை தொடங்கியது. லண்டனில் இருந்து 256 பயணிகள், விமானத்தில் இந்தியா வந்துள்ள நிலையில், அதில் எத்தனை பேருக்கு உருமாறிய கரோனா வைரஸ் இருக்கிறது எனத் தெரியவில்லை எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் உருமாறிய வைரஸ் தாக்கம் சற்றே அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் அந்தந்த மாநில அரசுகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள சுகாதார வசதிகளில் 'ஒற்றை அறை தனிமையில்' வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் முன்பு கூறியது.
» ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 2 ஆண்டுகள் சிறை: எய்ம்ஸ் ஊழியரைத் தாக்கிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
» சிவமூகா வெடி விபத்தில் 5 பேர் பலி; காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை: எடியூரப்பா தகவல்
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியுள்ளதாவது:
''இந்தியாவில் உருமாறிய கரோனா பாதிப்பு எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களில் ஒற்றை அறை தனிமையில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தற்போது தனிமைப்படுத்துதலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குப் பயணித்த பாதிக்கப்பட்டவர்களுடன் வந்த இணைப் பயணிகள், குடும்பத் தொடர்புகள், பிறருக்கு விரிவான தொடர்பு தடமறிதல் ஆகியவற்றுக்கான தேடல் தொடங்கப்பட்டுள்ளது. பிற மாதிரிகள் மீது மரபணு வரிசை முறை நடைபெறுகிறது.
நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல், சோதனை மற்றும் மாதிரிகளை INSACOG (Indian SARS-CoV-2 Genomics Consortium) ஆய்வகங்களுக்கு அனுப்புவதற்கு மாநிலங்களுக்கு வழக்கமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago