பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் அதிகரித்ததால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா (69), கடந்த 2017-ம் ஆண்டு முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனைக் காலம் நிறைவடைவதையடுத்து வரும் 27-ம் தேதி காலை சசிகலா விடுதலை செய் யப்பட இருப்பதாக சிறைத்துறை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. சசிகலாவின் விடுதலை, தமி ழக சட்டப்பேரவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிறையில் சசிகலாவுக்கு நேற்று முன் தினம் இரவு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரை சிறையில் உள்ள மருத் துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அவ ருக்கு நேற்று மூச்சுத்திணறல் அதிகரித்த தால் வெளியில் இருந்து அரசு மருத்துவர் கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கரோனா இல்லை
சசிகலாவுக்கு காய்ச்சல், இருமலுடன் சுவா சிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் நேற்று மாலை சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்
துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் ஆம் புலன்ஸில் அவரை போலீஸார் அழைத்து வந்தனர். சக்கர நாற்காலி மூலம் அவசர
சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் ரத்த அழுத் தம், ஈசிஜி உள்ளிட்ட முதல்கட்ட பரிசோத னைகளை மேற்கொண்டனர். உடலில் ஆக்ஸிஜன் அளவு 84 ஆக இருந்ததால் கரோனா பரிசோதனை செய்தனர். அதில் தொற்று இல்லை என்பது தெரியவந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
உறவினர்கள் வருகை
சசிகலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது குறித்து அவரது உறவினர்கள் விவேக், டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு சிறை நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அவரது உறவினர்கள் பவுரிங் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறும்போது, ‘‘சசிகலாவுக்கு சாதாரண காய்ச்சல்தான். அவர் இப்போது நலமாக இருப்பதாக சிறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதிக்கு பின் பார்வையாளர்கள் யாரையும் சசிகலாவை சந்திக்க அனு மதிக்கவில்லை’’ என்றார்.
பவுரிங் அரசு மருத்துவ மனை டீன் மனோஜ்குமார் கூறும்போது, ‘‘சசிகலாவுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் இருக்கிறது. சர்க் கரை, ரத்த அழுத்தம் உள் ளிட்டவை சீராக உள்ளது. முதல்கட்ட சோதனைகளில் எந்த தீவிரமான உடல் பிரச்சினையும் அவருக்கு இல்லை என்பது தெரியவந்துள் ளது. 24 மணி நேர கண்காணிப்புக்கு பிறகே அடுத்தகட்ட நிலை குறித்து கூற முடியும்’’ என்றார்.
சுதாகரனின் வழக்கறிஞர் மூர்த்தி ராவ் கூறும்போது, ‘‘சசிகலாவுக்கு நீரிழிவு, சுவாச பிரச்சினை இருந்தபோதும் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் நலமாக இருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக வெளியே பரோலில்கூட வரவில்லை. விடுதலையாக 7 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது வருத்தமாக இருக்கிறது. வியாழக்கிழமை அவரை சந்திக்க போலீஸாரிடம் அனுமதி பெற்றுள்ளேன். திடீரென அவரது உடல்நிலையில் என்ன சிக்கல் வந்தது என்பது என தெரியவில்லை’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago