‘‘மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது’’- இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது என இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை 2-வது முறையாக வென்றது.

கடந்த 69 ஆண்டுகளுக்குப்பின் பிரிஸ்பேன் மைதானத்தில் மிக்பெரிய ஸ்கோரை சேஸிங் செய்து இந்திய அணி வென்றுள்ளது.

அதிலும் காபா மைதானத்தில் கடந்த 32 ஆண்டுகளாக ஆஸ்திேரலிய அணியை எந்த அணியும் வீழ்த்தியதில்லை என்ற வரலாற்றை மாற்றி இந்திய அணி இந்த வெற்றி மூலம் எழுதியுள்ளது.

இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றிக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

“ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. வீரர்களின் அபார ஆற்றலையும், வேட்கையையும் போட்டி முழுவதிலும் காண முடிந்தது. அதே போன்று தான் அவர்களது வானளாவிய நோக்கமும், சிறப்பான மனஉறுதியும், எடுத்துக் கொண்ட தீர்மானமும். அணியினருக்கு பாராட்டுகள் ! உங்களது வருங்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்