பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முக்கிய மைல்கல்லைக் கடந்துள்ளது. அன்றாட புதிய பாதிப்புகள் இதுவரை இல்லாத அளவில் இன்று மிகவும் குறைந்துள்ளன.
• ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த 24 மணி நேரத்தில் 10,064 பேர் நம் நாட்டில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2020, ஜூன் 12-ஆம் தேதி புதிய பாதிப்புகள் 10,956 ஆக பதிவாகியிருந்தன.
• இந்தியாவில் கரோனா நோய் தொற்றின் பாதிப்பு 2 இலட்சமாக (2,00,528) சரிந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 1.90 சதவீதமாகும்.
• புதிய பாதிப்புகள் குறைந்து வரும் வேளையில், அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கோவிட்- 19க்கு எதிரான தடுப்பூசிகளை போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் பெருவாரியாக அதிகரித்து வருகின்றது. தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமானோர் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.
» வேளாண் சட்டங்கள்: மத்திய அரசு- விவசாயிகள் இடையிலான 10-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை ஒத்திவைப்பு
• கடந்த 24 மணி நேரத்தில் 3930 அமர்வுகளில் 2,23,669 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 16,462 பேர் உட்பட நாட்டில் மொத்தம் 4,54,049 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் (இதுவரை நடைபெற்ற 7860 அமர்வுகளில்).
• பரிசோதனை வசதிகள் அதிகரித்திருப்பதன் காரணமாக பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. இந்தியாவில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு 1.97 சதவீதமாக உள்ளது.
• 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 140 க்கும் குறைவாக (137) பதிவாகியுள்ளது.
• நாட்டில் குணமடைந்தவர்களின் வீதம் 96.66 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,02,28,753 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 2,08,012 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
• கடந்த 24 மணி நேரத்தில் 17,411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
• கேரளாவில் அதிகபட்சமாக 3,921 பேர் ஒரே நாளில் புதிதாக குணமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3,854 பேரும், சட்டீஸ்கரில் 1,301 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர்.
• கேரளாவில் 3,346 பேரும், மகாராஷ்டிராவில் 1,924 பேரும், தமிழகத்தில் 551 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago