பிஹாரில் ஒவைஸியை சமாளிக்க 7 வருடங்களுக்கு பின் ஷாநவாஸ் உசைனை மீண்டும் முன்னிறுத்துகிறது பாஜக

By ஆர்.ஷபிமுன்னா

பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசதுத்தீன் ஒவைஸிக்கு முஸ்லிம்கள் இடையே ஆதரவு பெருகி உள்ளது. இவரை சமாளிக்க ஏழு வருடங்களுக்குப் பின் தமது மூத்த தலைவர் ஷாநவாஸ் உசைனை அம்மாநில மேலவை மூலமாகக் களம் இறக்குகிறது பாஜக.

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணியின் (என்டிஏ) கூட்டணி பிஹாரில் ஆள்கிறது. இதன் மேலவை உறுப்பினர்களாக (எம்எல்சி) இருந்த முன்னாள் துணை முதல்வர் சுசில்குமார் மோடி மற்றும் வினோத் நாராயண் ஜா ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.

இவ்விரு பதவிகளுக்கு இடைத்தேர்தல் வரும் ஜனவரி 28-ல் நடைபெறுகிறது. அடுத்த 17 மாதங்களுக்கான இப்பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சரான ஷாநவாஸ் உசைனை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.

இதன்மூலம், சுமார் ஏழு வருடங்களுக்கு பின் ஷாநவாஸ் உசைனுக்கு தீவிர அரசியலில் நுழையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் பின்னணியில் பிஹாரில் வளர்ந்து வரும் அகில இந்திய இத்தஹாதுல் முஸ்லிமின்(ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஒவைஸியை சமாளிப்பது காரணம் எனக் கருதப்படுகிறது.

பிஹாரில் பாஜகவிற்கு முஸ்லிம்கள் வாக்களிப்பதில்லை என்ற கருத்து, முதன்முறையாக ஷாநவாஸால் முறிக்கப்பட்டது. இவர் கடந்த 1999 மக்களவை தேர்தலில் பாஜகவின் சார்பில் முஸ்லிம்கள் அதிகமுள்ள கிஷண்கன்ச் தொகுதியில் எம்.பியானார்.

அடுத்து 2006 மற்றும் 2009 மக்களவைக்கும் பாகல்பூர் தொகுதியின் எம்.பியாக இருந்தார். இதனால் அவர் வாஜ்பாய் தலைமையிலான அரசில் தனது 32 வயதில் விமானத்துறையில் இணை அமைச்சராக்கப்பட்டார்.

பிறகு 2014- இல் மூன்றாவது முறையாக பாகல்பூரில் போட்டியிட்ட போது ஷாநவாஸுக்கு தோல்வி கிடைத்தது. அப்போது முதல் பாஜகவில் ஓரம்கட்டப்பட்ட நிலையில் இருந்தார் ஷாநவாஸ்.

2019 மக்களவை தேர்தலில் அவருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த மக்களவைக்கான மற்றும் பிஹார் சட்டப்பேரவை தேர்தல்களின் பிரச்சாரங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

தேசிய செய்தி தொடர்பாளர் பட்டியலில் இடம்பெற்றாலும் ஷாநவாஸ், ஓரிரு செய்தி தொலைகாட்சி சேனல்களின் விவாதங்களில் மட்டும் கலந்து கொண்டார். இதையடுத்து சுமார் ஏழு வருடங்களுக்கு பின் அவர் மீண்டும் பிஹார் மாநில தேர்தல் அரசியலில் களம் இறக்கப்பட்டுள்ளார்.

இந்தமுறை தேர்தலில் முதல்வர் நிதிஷின் கட்சியை விட 31 எம்எல்ஏக்கள் அதிகமாகப் பெற்றது பாஜக, எனினும், இவ்விரண்டு கட்சிகளிலும் ஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இல்லாமல் போனது.

இதனால், பிஹாரின் அமைச்சரவையில் முதன்முறையாக ஒரு அமைச்சர் கூட முஸ்லிம்களில் இல்லை. எனவே, ஷாநவாஸ் வெற்றி பெற்று எம்எல்சியானால் அவர் மாநில அமைச்சராக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

இதனிடையே, ஏழுவருடங்களாக பாஜகவில் முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்றாலும் ஷாநவாஸ் வேறு கட்சிகளுக்கும் செல்லவில்லை. இவர் போல், பதவிகள் இல்லாவிட்டாலும் பொறுமை காப்பவர்களை கட்சி கைவிடாது எனவும் ஒரு செய்தியை பாஜக தன் தலைவர்களுக்கு அளித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்