நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்ட இடங்களில் பண்ணை பறவைகளை அழிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
2021 ஜனவரி 18-இன் படி, ஐந்து மாநிலங்களில் பண்ணை பறவைகளிலும், ஒன்பது மாநிலங்களில் காகம், இடம்பெயர்ந்த,காட்டு பறவைகளிலும் 2021 பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.
மேலும், புதுடெல்லியில் உள்ள தீஸ் ஹசாரியில் இறந்து கிடந்த நாரையின் மாதிரிகளிலும், டெல்லியில் உள்ள செங்கோட்டையில் காகத்திடமும் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. தேவையான நடவடிக்கை எடுப்பதற்கான அறிவுரை தில்லி அரசிடம் வழங்கப்பட்டது.
துரித நடவடிக்கை குழுக்கள் மகாராஷ்டிராவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் பண்ணை பறவைகளை அழிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. மும்பையிலுள்ள மத்திய பண்ணை வளர்ச்சி அமைப்பில் ஒழிப்பு பணிகள் நிறைவடைந்து, தூய்மைப்படுத்துதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேந்த்ரேவாடி, அகமதுபூர், சுகானி, தொண்டார் (வஜ்ரவாடி) மற்றும் குர்த்வாடி போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒழிப்பு மற்றும் தூய்மைப்படுத்துதல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
மேலும், மத்தியப் பிரதேசம் (ஹர்தா மற்றும் மண்ட்சவுர் மாவட்டங்கள்), மற்றும் சத்திஸ்கர் (பலோட் மாவட்டம்) ஆகிய இடங்களில், பண்ணைகளில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட இடங்களை சுற்றி 1 கி.மீ பரப்பளவில் பண்ணை பறவைகளை அழிப்பதற்காக துரித நடவடிக்கை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பண்ணை பறவைகளின் அழிப்பு நடவடிக்கைகள் ஹரியாணாவில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் (பஞ்ச்குலா மாவட்டம்) தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago