தனி நபர் தகவல்களை அனுமதிஇன்றி வாட்ஸ் அப் எடுத்தாள்வதாக கவலைப்படுபவர்கள் அதை பயன்படுத்தாதீர்கள் என்றுடெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.
பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப், தனி நபர்களின் தகவல்களை அனுமதி இன்றி எடுத்தாள்வதாகவும் பரி மாறப்படும் மெசேஜ், ஆடியோ, வீடியோக்களை உளவு பார்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தனி நபர் தகவல் பாதுகாப்பு உரிமையை மீறுவதாகும்என வாட்ஸ் அப் நிறுவனத்துக்குஎதிராக வழக்கு தொடரப்பட் டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவா கூறுகையில், ‘‘வாட்ஸ்அப் மட்டுமல்ல பெரும்பாலான செயலிகள் தனி நபர் தகவல்களை சேகரிக்கின்றன. வாட்ஸ்அப் நிறுவனம் தகவல்களைச் சேகரிக்கிறது, உளவு பார்க்கிறது என்று கருதுபவர்கள் தங்கள் மொபைலில் இருந்து அதை நீக்கி விடுங்கள்’’ என்றார்.
மேலும், நேரமின்மை காரணத்தால் நீதிபதி இந்த வழக்கை ஜன.25-ம் தேதிக்கு தள்ளி வைத்ததோடு, வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்ப முடியாது என்றும் உத்தரவிட்டார்.
வாட்ஸ் அப் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறுகையில், ‘‘பிசினஸ் கணக்குகளின் பிரைவசி கொள்கைகள் மட்டும்தான் மாற்றப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட கணக்குகளில் வழக்கம் போல பரிமாறும் தகவல்கள் எண்ட் டு எண்ட் என்க்ரிப்ட் (பாதுகாக்கப்பட்ட) தகவல்களாகவே உள்ளன என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago