2 நாளில் 2,24,301 பயனாளிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி

By செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் இதுவரை 2,24,301 பயனாளிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளன்று இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று வரை 2,24,301 பயனாளிகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான மிகப்பெரும் தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் நாளில் 6 மாநிலங்களில் (ஞாயிற்றுக்கிழமையாதலால்) மொத்தம் 553 பிரிவுகளில் தமிழகத்தில் 165, ஆந்திரப் பிரதேசத்தில் 308, அருணாச்சல பிரதேசத்தில் 14, கர்நாடகாவில் 64, மணிப்பூர், கேரளாவில் தலா 1) 17,072 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

ஜனவரி 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு 447 பேருக்கு சிறிய உடல் உபாதைகள் ஏற்பட்டன. இவர்களின் மூவர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் டெல்லியின் வடக்கு ரயில்வே மருத்துவமனையிலிருந்து 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பினார்.‌ மற்றொருவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். பெரும்பாலோனோருக்கு காய்ச்சல், தலைவலி, குமட்டல் போன்ற சிறிய உடல் உபாதைகள் ஏற்பட்டன.

தடுப்பூசித் திட்டத்தின் செயல்பாடு, எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவற்றிற்கான தீர்வுகள் குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்