உத்தர பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தின் கஜா குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்விந்த் குமார்சர்மா. 1988-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக குஜராத் மாநிலத்தில் பொறுப்பெற்றார். இவர், குஜராத்தில் கடந்த 2001-ல் மோடி முதல்வரானது முதல் அவரது செயலாளராக இருந்தார். பிறகு 2014-ல்பிரதமராக பொறுப்பேற்ற மோடி,ஆர்.கே.சர்மாவை மத்திய அரசுப்பணிக்கு அழைத்து தனது அலுவலகத்தில் பணியமர்த்தினார். 2020முதல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் செயலாளராக பதவி வகித்த அவர், தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்புஆர்.கே.சர்மா, பாஜக.வில்இணைந்தார். இவரை உ.பி. பாஜகசார்பில் மாநில மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.யில் காலியாக உள்ள 12 மேலவைஇடங்களுக்கு வரும் 28-ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக.வுக்கு சுமார் 10 உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர். இதற்காக 4 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இதில் தற்போதைய எம்எல்சி.க்களான உ.பி. துணை முதல்வர் தினேஷ் சர்மா, பாஜக மாநில தலைவர் சுவந்திர தியோ சிங் மற்றும்லக்ஷமண் ஆச்சார்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இதையடுத்து, சர்மாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’நாளேட்டிடம் பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது,"சிறந்த அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு மாநிலத்தில் எந்த அரசியல் கட்சியின் ஆட்சியும் வெற்றி பெறாது என்பது எங்கள் தலைவர்களின் கருத்து. இதனால், நாடு முழுவதிலும் உள்ள பாஜக ஆளும் மாநிலங்களில் ஓய்வு பெற்ற அல்லது ராஜினாமா செய்தஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணி அதிகாரிகளின் உழைப்பை அதிகம் பெற முடிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே,சர்மாவை துணை முதல்வராக்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.
உ.பி.யில் மேலவை தேர்தலுக்கு பின் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. இதில், இரண்டு துணை முதல்வர்களான கேசவ் பிரசாத் மவுர்யா மற்றும் தினேஷ் சர்மாவின் பதவிகளிலும் மாற்றம் செய்யப்படும் எனத் தெரிகிறது. தினேஷ் சர்மாவை மேலவை தலைவராக்க பாஜக திட்டமிடுகிறது. மேலவை தலைவராக இருக்கும் சமாஜ்வாதியின் ரமேஷ் யாதவ் பதவி ஜனவரி 31-ல் நிறைவு பெறுகிறது. இதன் பிறகு தினேஷ் சர்மா வகித்த துணை முதல்வர் பதவியில் எம்எல்சி.யான ஆர்.கே.சர்மா அமர்த்தப்பட உள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
32 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago