திரிபுராவில் மாநில காங்கிரஸ் தலைவரின் காரை சேதப்படுத்தியதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை திரிபுரா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிஜுஷ் காந்தி பிஸ்வாஸ் தனது வீட்டிலிருந்து காரில் புறப்பட்டார். காரில் சென்று கொண்டிருந்த காங்கிரஸ் தலைவரின் வாகனத்தை சிலர் வழிமறித்து வாகனத்தின்மீது கடுமையான தாக்குதலில ஈடுபட்டனர்.
மேலும் பிஜுஸ் காந்தியும் தாக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாநிலத் தலைவர் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் திங்களன்று மாநிலத்தில் 12 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
» விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதை வேளாண் சட்டங்கள் உறுதி செய்யும்: அமித் ஷா
» மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து: உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் உயிரிழப்பு தவிர்ப்பு
இதுகுறித்து காங்கிரஸின் மூத்த தலைவர் ரிபுன் போரா தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
"திரிபுரா பிரதேச காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) தலைவர் பிஜுஷ் பிஸ்வாஸ் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்த பாஜக தனது குண்டர்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
சுமார் 100 குண்டர்கள் அவரது காரை இரும்புக் கம்பிகளால் போலீஸார் முன்னிலையில் தாக்கினர். பிஜுஸ் பிஸ்வாஸ் மிகுந்த காயமடைந்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எதிர்க்கட்சி இப்போது நாட்டில் பாதுகாப்பாக நடக்கக் கூட முடியாதா?
இவ்வாறு தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago