கொல்கத்தா தீ விபத்தில் 150 குடிசைகள் நாசம்:  குடியிருப்புகளை புனரமைத்துத் தருவதாக மம்தா உறுதி

By பிடிஐ

கொல்கத்தா தீ விபத்தில் 150 குடிசைகள் எரிந்து நாசமானதை அடுத்து அப்பகுதியில் மம்தா பானர்ஜி நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது அப்பகுதி மக்களிடம் குடியிருப்புகள் அனைத்தும் மீண்டும் புனரமைத்துத் தருவதாக உறுதியளித்தார்.

கொல்கத்தாவின் பாக்பஜார் பகுதியில் அமைந்துள்ள குடிசைப்பகுதியில் புதன் கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களின் 4 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குக்குள் வந்தது. இதில் 150 குடிசைகள் எரிந்து நாசமானது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று அப்பகுதியை நேரில் ஆய்வு செய்தார். இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் குடியிருப்புகள் புதியதாக புனரமைக்கப்படும். அதுவரை 700க்கும் மேற்பட்ட அனைவருக்கும் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து கிலோ அரிசி, பயறு, காய்கறிகள் மற்றும் குழந்தைகளுக்கு பால் வழங்கப்படும்.

உங்கள் குடியிருப்புகள் புனரமைக்கப்படும் வரை நீங்கள் பாக்பஜார் மகளிர் கல்லூரியில் தங்கிக்கொள்ளலாம். அங்கு உங்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படும். அனைவருக்கும் ஆடைகள் மட்டுமின்றி போதுமான எண்ணிக்கையில் போர்வைகளும் வழங்கப்படும்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்