பச்சிளம் குழந்தைகள் முதல் 5 வயது குழந்தைகள் வரைவழங்கப்படும் தேசிய போலியா சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ம் தேதி நாடுமுழுவதும் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளது.
போலியோ முகாம் வரும் 17-ம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் அந்த தேதி ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் புதிய தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
வரும் 16-ம் தேதி நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, போலியா சொட்டுமருந்து முகாம் 17-ம் தேதி நடக்க இருந்தது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
இரு முகாம்களையும் அடுத்தடுத்து நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால், போலியோ முகாம் தள்ளிவைக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 9-ம் த்தேதி அனைத்து மாநில அரசுகளின் சுகாதாரத்துறை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பி இருந்தது.
» மகாராஷ்டிராவில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் பகிரங்க ஏலம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
» இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் பாதிப்பு
இந்நிலையில் மத்திய சுகதாரத்துறை அமைச்சகம் இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது அதில் “நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி முகாம் வரும் 16ம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்படுகிறது.
இதன் காரணமாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு அமைச்சகங்களுடன் நடத்திய ஆலோசனையையடுத்து, 17-ம் தேதி நடக்க இருந்தபோலியா சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 31-ம்தேதி போலியோ சொட்டு மருந்து முகாமை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 30-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை 11.45 மணிக்கு சில குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமைதொடங்கி வைப்பார். 31-ம் தேதி நாடுமுழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கும்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
20 hours ago