ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முழு உருவச் சிலைகள் நேற்று திறக்கப்பட்டது.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 84-வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாமின் முழு உருவச் சிலையை மாநில சட்டப்பேரவைத் தலைவர் கோடல சிவபிரசாத் திறந்து வைத் தார். இவ்விழாவில், அமைச்சர் கள், கிஷோர் பாபு, புல்லா ராவ், ஸ்ரீநிவாச ராவ் மற்றும் அதிகாரிகள், மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல ஹைதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்துக்கு நேற்று அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த வளாகத்தில் அப்துல் கலாமின் முழு உருவச் சிலையை சந்திர சேகர ராவ் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும்போது, “மாமனிதர் அப்துல் கலாம் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்ததை பெருமையாக கருதுகிறேன். அவர் மரணமடைந்த செய்தியை கேட்டு நாடே கண்ணீர் விட்டு அழுதது. அவர் இந்திய தாயின் செல்ல மகன். தாய் நாட்டுக்காக இறுதி வரை உழைத்த மகான்” என்றார்.
இந்த வளாகத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), அட் வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லெபாரட்டரி (ஏஎஸ்எல்) மற்றும் இமரத் ஆராய்ச்சி மையம் (ஆர்சிஐ) ஆகியவை அமைந்துள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago