டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச பல் சிகிச்சை முகாம்: இதுவரை பல் பிடுங்கி பலனடைந்த 2,700 பேர்

By ஆர்.ஷபிமுன்னா

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச பல் சிகிசை முகாம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றவர்களில் இதுவரை 2,700 பேர் தம் சொத்தைப் பற்களை பிடுங்கி பலனடைந்துள்ளனர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் மசோதாக்களை வாபஸ் பெறுவது உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் போராட்டம் தொடர்கிறது.

இதில், கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை வசதிகளும் கிடைக்கின்றன. இதில் ஒன்றாக கடந்த நவம்பர் 28 முதல் இலவச பல் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

ஹரியாணாவின் பிரபல பல் மருத்துவரான சன்னி அகர்வால் தலைமையிலானதில் இதுவரை 2,700 விவசாயிகள் தம் சொத்தை பற்களை பிடுங்கி உள்ளனர். தாம் இருக்கும் இடத்தில் எளிதாகக் கிடைக்காத இந்த வசதியால் விவசாயிகள் பலரும் பயன் பெறுகிறார்கள்.

இதுபோல், பற்களை பிடுங்கியவர்களுக்காக குறிப்பிட்ட வகை உணவும் அந்த முகாம் அருகிலேயே சமைத்து வழங்கப்படுகிறது. இதனால், இந்த மருத்துவ வசதியை பயன்படுத்திக் கொள்ள அந்த எல்லைகளை சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் வந்தபடி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்